Homeசெய்தி"நில உரிமையே நிஜ உரிமை"

“நில உரிமையே நிஜ உரிமை”

மலையக அரசியல் அரங்கத்தின் தொழிற்சங்க அமைப்பான மலையக பாட்டாளிகள் அரங்கம் கலந்து கொள்ளும்
மேதினம் பசறை நகரசபை மண்டபத்தில் 2026 மே முதலாம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மலையக அரசியல் அரங்கத்தின் செயதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வின் சிறப்பு சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.

மலையக பாட்டாளிகள் அரங்கத்தின் “மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாராக்கு” எனும் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக

மலையக ஊழியர் சங்கத்தின் ‘நில உரிமையே நிஜ உரிமை’ எனும் தொனிப்பொருளுக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டு மேதினம் இடம் பெறவுள்ளதால்
உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து உரிமைக்காக குரல் கொடுப்போம் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைவி அருளப்பன் இதய ஜோதி அழைப்பு விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular