follow the truth

follow the truth

December, 21, 2024
Homeஉள்நாடுஜேவிபி ஆட்சியில் 25 அமைச்சர்கள்தான் – திட்டத்தை வெளியிட்டார் அனுர குமார திஸாநாயக்க

ஜேவிபி ஆட்சியில் 25 அமைச்சர்கள்தான் – திட்டத்தை வெளியிட்டார் அனுர குமார திஸாநாயக்க

Published on

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சரவை அமைச்சர்களும் 25 பிரதி அமைச்சர்களும் மாத்திரமே இருப்பர் என அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த அரசாங்கத்தின் கீழ் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்ற பல்வேறு விடயங்கள் நிபுணர்கள் குழுவிடம் கையளிக்கப்படும் எனவும் அமைச்சரவை நாட்டை நிர்வகிக்கும் எனவும் அவர் கூறினார்.

சுகாதாரத்தை நளிந்த ஜயதிஸ்ஸ, நிஹால் அபேசிங்க போன்றவர்கள் கொண்ட குழுவும், பொருளாதாரத்தை சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க போன்றவர்களும் கட்டுப்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.

ஜே.வி.பி.யின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, தாம் நாட்டின் ஜனாதிபதியானால் அரசியல்வாதிகளின் அனைத்து சிறப்புரிமைகளும் இல்லாதொழிக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என அவர் தொலைக்காட்சி கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது

வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் மருதானை பொலிஸாரினால் இன்று (21) கைது...

‘கலாநிதி’ பட்டம் தொடர்பில் மூவரிடம் CID வாக்குமூலம்

பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதப்பட்ட...

ஹட்டன் பேருந்து விபத்தில் மூவர் உயிரிழப்பு

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது. பஸ் வீதியை விட்டு...