Homeஉலகம்காசாவில் 72 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!

காசாவில் 72 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,562 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,320 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2023 ஒக்டோர் 7 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த இன அழிப்பு இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் கடந்த வருடம் ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. எனினும், போர்நிறுத்த விதிமுறைகளைமீறி இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது.

போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 786 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular