Homeஉலகம்ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் இன்று (20) 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கரையோர மாவட்டங்களுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சுமார் மூன்று மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என்பதால், பொதுமக்கள் உடனடியாக உயரமான பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டோக்கியோ வரை உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்புகளை எதிர்கொள்ளவும் நிலைமையைச் சீரமைக்கவும் ஜப்பான் பிரதமர் அலுவலகம் ஒரு சிறப்பு நெருக்கடி மேலாண்மைக் குழுவை அமைத்துள்ளது.

அடுத்தடுத்து அலைகள் வரக்கூடும் என்பதால், எச்சரிக்கை திரும்பப் பெறப்படும் வரை மக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular