Homeஉலகம்அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ஈரான் திட்டவட்டம்!

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ஈரான் திட்டவட்டம்!

அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் எவ்விதமான அச்சுறுத்தல்களுக்கும் ஈரானிய மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள் என அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்  திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தமது நாடு ஏனைய நாடுகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுகளை நடத்தவே விரும்புகிறது எனவும், போரை ஈரான் வலிந்து விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் மீண்டும் அமைதி பேச்சு நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ள நிலையிலேயே, ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும், ஈரான் பேச்சுக்கு தயாரா என்பது பற்றி அந்த தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தேசிய இறையாண்மையை பாதுகாப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது என அந்நாட்டு பிரமுகர்கள் இடித்துரைத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular