Homeஉலகம்மீண்டும் அமைதி பேச்சு?

மீண்டும் அமைதி பேச்சு?

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் நடைபெறுவதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

இதற்குரிய சாதக சமிக்ஞையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய அடுத்த ஓரிரு நாட்களுக்குள் பேச்சு நடைபெறக்கூடும் என தெரியவருகின்றது.

இந்தப் பேச்சுகளை ஒருங்கிணைப்பதில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆற்றிவரும் முக்கியப் பங்கினை டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற முதற்கட்ட அமைதி பேச்சு தோல்வியில் முடிவடைந்தது.

இதனையடுத்து ஈரான் துறைமுகங்கள்மீதான முற்றுகை நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது நிலவும் இருவார கால போர்நிறுத்தம் முடிவதற்குள், மீண்டும் ஒரு சந்திப்பை நடத்தி சுமுகமான முடிவை எட்ட பாகிஸ்தான் தீவிரமாக முயன்று வருகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular