Homeஉலகம்ஈரான் உளவுத்துறை தளபதி பலி!

ஈரான் உளவுத்துறை தளபதி பலி!

ஈரான் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி Majid Khademi, கொல்லப்பட்டுள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

தாக்குதலுக்குரிய பொறுப்பை இஸ்ரேல் ஏற்றுள்ளது.

பயங்கரவாதத் தலைவர்களுக்கு எதிரான வேட்டை தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரின் போது கொல்லப்பட்ட முகமது காசேமிக்கு பதிலாகவே காதேமி மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

ஈரானில் வெடித்த மக்கள் போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாட்டு உளவு அமைப்புகள் இருப்பதாக இவர் கடுமையாகச் சாடியிருந்தார்.

குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வன்முறையைத் தூண்டியதாக இவர் குற்றம் சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய உளவுத்துறையின் முக்கிய நபர் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டுக்கு இப்போரில் ஏற்பட்ட பின்னடைவாகக் கருதப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular