Homeஉள்நாடுஇறுதிப்போட்டிக்கு தெரிவாகும் முதல் அணி எது? இன்று பலப்பரீட்சை!

இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் முதல் அணி எது? இன்று பலப்பரீட்சை!

ICC Men’s T20 World Cup தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த முக்கியமான ஆட்டம் Eden Gardens மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

தென்னாபிரிக்கா அணி இந்த தொடரில் இதுவரை தோல்வியறியாத அணியாக திகழ்கிறது. லீக் சுற்றில் 4 போட்டிகளிலும், சூப்பர் 8 சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, மொத்தம் 7 தொடர்ச்சியான வெற்றிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. அணியின் ஒட்டுமொத்த செயல்திறன் சமநிலையுடன் காணப்படுகிறது.

மறுபுறம், நியூசிலாந்து அணி லீக் சுற்றில் 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்தது. சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இலங்கையை வீழ்த்திய நிலையில், இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. இருப்பினும், சிறந்த நிகர ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.

T20 உலகக் கிண்ண வரலாற்றில் இவ்விரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அந்த அனைத்து சந்திப்புகளிலும் தென்னாபிரிக்காவே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பின்னணியில், இன்றைய அரையிறுதி போட்டி கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular