உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை விடுதலை செய்வதா, இல்லையா? என்பது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளரை விடுவிப்பதா, இல்லையா? என்பது குறித்து அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றின் விசேட ஆயம் தெரிவித்துள்ளது.