திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்காவது எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இன்று பதிவாகியுள்ளது
இச்சம்பவத்தில் எந்த விதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கந்தளாய் பிரதேசத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.