follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுகெரவலப்பிட்டிய ஒப்பந்தம் : இன்று முதல் மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

கெரவலப்பிட்டிய ஒப்பந்தம் : இன்று முதல் மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

Published on

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலயத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது.

அதன்படி, உயர் நீதிமன்றத்தில் இன்றும் , நாளையும், வெள்ளிக்கிழமையும் மனுக்கள் மீதான பரிசீலனை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

கடந்த வாரம் இடம்பெற்ற பரிசீலனையின் போது நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய இல்லாத காரணத்தினால், விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்ற அமர்வு தீர்மானித்தது.

எல்லே குணவன்ச தேரர், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, மற்றும் சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லசந்த வழக்கின் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க...

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...