ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க உள்ளார்.
நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை அனுமதித்துக்கொண்ட பின்னர் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிவரை சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி காேட்டாய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனவரி 18ஆம் திகதிவரை ஒத்திவைத்திருந்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டால் அது மீண்டும் ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்படவேண்டியது நாடாளுமன்ற சம்பிரதாயமாகும்.
அதன்படி ஜனாதிபதியினால் அரசின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கபட்ட பின்னர், நாடாளுமன்றம் மறுநாள் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படும்.