கொழும்பு, வௌ்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து குதித்து 87 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு ஏற்பட்ட மனவேதனை காரணமாக அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.