புகையிரத நிலைய அதிபா்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே தமது தொழிற்சங்க நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் கைவிடப்பட்டதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்க தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளாா்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12ஆம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் இந்த 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.