தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கருத்திற்கொண்டு போராட்டங்களை தற்காலிகமாக கைவிடுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம், அதிபர் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
விசேட வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நாளொன்றில் அதிகளவானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாவதுடன், மரணங்களும் பதிவாகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில், அதிக எண்ணிக்கையிலானோர் போராட்டங்களுக்காக ஒன்றுக்கூடுவதால் ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயங்களை கருத்திற்கொண்டு போராட்டங்களை தற்காலிகமாக கைவிடுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.