Homeஉலகம்இந்தியா வருகிறார் உக்ரைன் ஜனாதிபதி!

இந்தியா வருகிறார் உக்ரைன் ஜனாதிபதி!

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் உயிரிழ்ந்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் மோடியுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், உக்ரைன் போர் குறித்து ரஷ்ய ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி கூறும்போது, மோதல்களுக்கு தூதரக ரீதியில் பேச்சுவாரத்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் கூறும்போது, “உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர இருக்கிறார். ஜெலென்ஸ்கியின் பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா வரும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியை சந்திப்பார். அப்போது போர் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள். உக்ரைன் ஜனாதிபதி இந்திய பயணம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular