Homeஉலகம்போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயார்: ட்ரம்ப் தகவல்!

போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயார்: ட்ரம்ப் தகவல்!

” போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது. சமாதானம் செய்ய ரஷ்ய ஜனாதிபதி புடின் தயாராக இருக்கிறார்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடினை அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளார்.

அப்போது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் வலியுறுத்த இருக்கிறார்.
இந்நிலையில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது:

” நான் 6 மாதங்களுக்குள் 6 போர்களைத் தீர்த்துவிட்டேன். இந்தியா-பாகிஸ்தான் போரின் போது 6 முதல் 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவை அணு ஆயுதம் ஏந்தத் தயாராக இருந்தன. நாங்கள் அதைத் தீர்த்தோம். போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது.

சமாதானம் செய்ய ரஷ்ய ஜனாதிபதி புடின் தயாராக இருக்கிறார். அதேபோல், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமாதானம் செய்வார் என்று நான் நினைக்கிறேன். அலாஸ்காவில் புடினுடனான ஒரு முக்கியமான சந்திப்பு.

நாங்கள் உக்ரைனுக்கு எந்தப் பணத்தையும் செலுத்தவில்லை. ஆனால் நாங்கள் ராணுவ உபகரணங்களை வழங்குகிறோம். உக்ரைன்- ரஷ்யா போர் தொடங்கியது போது நான் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் ஒருபோதும் நடந்திருக்காது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular