Homeஉள்நாடுகுற்றச்செயல்கள் தடுக்கப்படும்: போதைப்பொருள் மாபியாக்களுக்கு கடும் நடவடிக்கை!

குற்றச்செயல்கள் தடுக்கப்படும்: போதைப்பொருள் மாபியாக்களுக்கு கடும் நடவடிக்கை!

பொலிஸார் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைவைப்பதில்லை. குற்றச்செயல்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்ட ஏற்பாடுகள் அவசியம் – என்று பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நேற்று தெரிவித்தார்.

” நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தலைமறைவாகி இருந்த 11 குற்றவாளிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றச்செயல்களைத் தடுக்கும், குற்றக்குழுக்களை ஒடுக்கும் வேலைத்திட்டத்தை தற்போதுள்ள சாதாரண சட்டத்தின் பிரகாரம் முழுமையாக முன்னெடுக்க முடியாது. இது பற்றி ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளோம். இதற்கமைய தேவையான புதிய சட்ட ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுவருகின்றது.”எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது விடயத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கப்பெறுகின்றது. சர்வதேசத்தின் நன்மதிப்பை இலங்கை பொலிஸ் பெற்றுள்ளது.

அதேவேளை, நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களைத் தடுப்பதற்குரிய வேலைத்திட்டம் செயற்படுகின்றது. சட்டத்தில் சிற்சில குறைப்பாடுகள் உள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தில் நாம் தற்போது கைவைப்பதில்லை.

இவ்வாறு சட்டரீதியாக உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். போதைப்பொருள் மாபியாக்களின் பிடிக்குள் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள். உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்என பொலிஸ்மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular