Homeஉள்நாடுசெம்மணியில் 22 ஆம் திகதி முதல் மீண்டும் அகழ்வுப் பணி!

செம்மணியில் 22 ஆம் திகதி முதல் மீண்டும் அகழ்வுப் பணி!

செம்மணிப் புதைகுழி மீதான அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழி மீதான அகழ்வுப்பணிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

பணியாளர்களின் பணிச்சுமை, ஓய்வு உள்ளிட்ட காரணங்களைக் கருத்திற்கொண்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், எதிர்வரும் 22ஆம் திகதியன்று அகழ்வுப் பணிகள் மீளவும் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியில், ஜி. பி. ஆர். ஸ்கானர் மூலம்,பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பணம் செய்துள்ளது.

செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, யாழ்ப்பாணம் சட்டத்தரணி கள் சங்கத்தின் சார்பில் சட்டத்தரணிகளான குருபரன் மற்றும் ஜெயரூபன் ஆகியோர் மன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

இதன்போதே, ஜி.பி.ஆர். ஸ்கானர் மூலம் ஆய்வுப் பணிகளைத் தொடர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து அதை புதைகுழி அகழ்வு தொடர்பான பட்ஜெட்டுக்குள் உள்ளடக்க வேண்டும் என்று நீதிபதி கட்டளை வழங்கினார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular