Homeஉள்நாடுதண்டவாளத்தில் நின்று தொலைபேசியில் உரையாடிய இளைஞன் ரயில் மோதி பலி!

தண்டவாளத்தில் நின்று தொலைபேசியில் உரையாடிய இளைஞன் ரயில் மோதி பலி!

 

 

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று கைதொலை பேசியில் உரையாடிக் கொண்டிருந்தவர் ரயில் மோதியதில் உயிரிழந்தார்.

23 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இவ்வாறு உயிரிழந்தார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் கரிகரராஜ் என்பவரே இவ்வாறு ரயிலால் மோதுண்டு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையை அடுத்துநேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தில் நின்று கொண்டுமனைவியுடன் தொலைபேசியில் சச்சரவுப் பட்டுக்கொண்டிருந்த நிலையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்புநோக்கிச் சென்ற் ரயிலில் மோதி, சம்பவ இடத்திலேயேஉயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரின் சடலத்தை மீட்டு ஏறாவூர் ரயில்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு ரயில் கொழும்பு நோக்கிச்சென்றது.
இது தொடர்பாக ஏறாவூர் மற்றும் கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular