Homeஉள்நாடுயட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர், மனைவி, மகள் சடலங்களாக மீட்பு!

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர், மனைவி, மகள் சடலங்களாக மீட்பு!

 

கண்டி மாவட்டம், யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் (ஐக்கிய மக்கள் சக்தி) சம்பிக விஜேரத்ன (வயது – 53), அவரது மனைவி (வயது – 44) மற்றும் மகள் (வயது – 16) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பேராதனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டுக்குள் வெவ்வேறான இடங்களிலேயே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

இளைய மகள் உயிர் தப்பியுள்ளார் என தெரியவருகின்றது.

இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது இது கொலைச் சம்பவமா என்ற கோணத்தில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular