பாணந்துறை மற்றும் மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பாணந்துறை – மொரட்டுவையில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்துகளை இயக்கும் நீண்ட தூர பேருந்து சாரதிகளுக்கும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மேற்படி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்(09) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பேருந்து ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பாணந்துறை – கொழும்பு கோட்டை (100) , மொறட்டுவ − கொழும்பு கோட்டை (101) மற்றும் பாணந்துறை − நுகேகொட (183) ஆகிய மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் பஸ் ஊழியர்களே இவ்வாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.