Homeஉள்நாடு46 சான்றுப்பொருள்கள் மீட்பு!

46 சான்றுப்பொருள்கள் மீட்பு!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி யில் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 46 சான்றுப்பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன் றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயா னத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் முதலாம் கட்டமாக 9 நாள்கள் இடம்பெற்ற அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டமாக 21 நாள்கள் (நேற்று வரை) இடம்பெற்ற அகழ்வில் 46 சான்றுப்பொருள்கள் அடையாளம் காணப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவ லில் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை சிறுவர்களின் பாடசாலைப் புத்தகப் பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை, காற்சங்கிலி, சிறு வளையல், இரும்புக் கட்டிகள், போத்தல், பாதணி கள், சிறுமிகளின் ஆடைகள், கற்கள், பிளாஸ்டிக் மாலை உள்ளிட்ட 46 சான்றுப் பொருள்கள் அகழ்ந்து எடுக்கப்பட் டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular