இரத்தத்தில் உள்ள ஒக்சீசன் அளவை கண்காணிக்க உதவும் 300 துடிப்பு ஒக்சிமீட்டர்கள் (PULSE OXIMETER) வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம தேரரினால் இன்று (06) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது.
கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் வசதிக்காக பகிர்ந்தளிப்பதற்காக இந்த துடிப்பு ஒக்சிமீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொற்று நிலைமைக்கு மத்தியில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை பாராட்டுவதாக களனி மாதெல்வத்த விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம தேரர் இதன்போது தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர், அரசாங்கம் முன்னெடுத்துவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்கும், சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பையும் பாராட்டினார்.