Homeஉள்நாடுபயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று யாழில் முன்னெடுக்கப்பட்டது.

சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இடம்பெற்றது.

இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காக போராடுவோம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular