Homeஉள்நாடுசெம்மணி புதைகுழி: உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்!

செம்மணி புதைகுழி: உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்!

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சிவில், சமூக செயற்பாட்டாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழி உட்பட இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கோரி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

சிவில் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து நீதிக்கான மக்கள் சக்தி எனும் கூட்டணியாக போராட்டத்துக்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது உரையாற்றிய ஜோசப் ஸ்டாலின்,
‘செம்மணி மனித புதைகுழியில் பாரதூரமான குற்றமே நடந்துள்ளது. அதேபோல இலங்கையில் இதுவரையில் இப்படியான 22 மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், இவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மனித புதைகுழிகள் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. அந்த பொறுப்பை நிறைவேற்றுமா என்பது தெரிகிறதா? உரிய வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.” என்று குறிப்பிட்டார்.

எனவே, இனியும் அரசாங்கம் பதுங்கக்கூடாது. செம்மணி புதைகுழி உட்பட புதைகுழி விவகாரத்துக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். உயிரிழந்த மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.” – என ஸ்டாலின் மேலும் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular