Homeஉள்நாடுவாசனை திரவியத்தை முகர்ந்த மாணவர்கள் பாதிப்பு: தலவாக்கலையில் சம்பவம்!

வாசனை திரவியத்தை முகர்ந்த மாணவர்கள் பாதிப்பு: தலவாக்கலையில் சம்பவம்!

தலவாக்கலை பகுதியிலுள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள், வாசனை திரவியத்தை முகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டனர். குறித்த வாசனை திரவியத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய இரசாயனங்கள் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த வாசனை திரவியத்தைமுகர்ந்தததால் குறித்த மாணவர்களுக்கு தலைசுற்றல், தலைவலி, குமட்டல் , வாந்தி  மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பிரதேச பிராந்திய வைத்திசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி தெரிவித்தார். எனினும் மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும் வைத்தியர் தெரிவித்தார் ,

தலவாக்கலை பகுதியில் இயங்கும் குறித்த தமிழ் பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் ஒரு மாணவர் பாடசாலைக்கு கொண்டு வந்து நறுமண போத்தலை ஏனைய மாணவர்களுக்கும் பூசியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது.

நானுஓயா நிருபர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular