ஜனவரி முதல் வாரத்தில் சுமார் 16,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் சில பகுதிகளில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இலங்கை கவனம் செலுத்தும் என தெரிவித்தார்.
தற்போது அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க ஒரு மாதத்திற்கு குறைந்தது 150,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.