ஐஸ்கிரீம் மற்றும் தயிர் உற்பத்தி விகிதத்தை குறைத்து திரவ பால் மற்றும் பால் மாவின் உற்பத்தி விகிதத்திற்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சந்தையில் பால் மாவுக்கான தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடமாடும் சேவையின் ஊடாக திரவப் பாலை விநியோகிக்கும் முயற்சி உட்பட நாளாந்த பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கால்நடை இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.