Homeஉள்நாடுபாகிஸ்தான் இராணுவ தளபதி இலங்கை விஜயம்!

பாகிஸ்தான் இராணுவ தளபதி இலங்கை விஜயம்!

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர், எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை விஜயத்தின் பின்னர் அவர் இந்தோனேசியாவுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொழும்பு பயணத்தின்போது இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியல் மற்றும் பாதுகாப்பு சார் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திப்பாரெனவும் தெரியவருகின்றது. எனினும், பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை விஜயம் பற்றி இலங்கை வெளிவிவகார அமைச்சு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular