Homeஉலகம்குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி!

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி!

இந்தியா, குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 10 பேர் உயிரிழந்தனர்.

இந்தப் பாலத்தில் எப்போதும் காலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும்.

இன்று காலை 7:30 மணியளவில் இரண்டு லாரிகள், ஒரு எஸ்யூவி கார் மற்றும் ஒரு பிக்அப் வேன் உட்பட நான்கு வாகனங்கள் பாலத்தைக் கடக்கும்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது.

விபத்து நடந்தவுடன் தீயணைப்புப் படை குழுக்கள், காவல்துறை மற்றும் வதோதரா மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

மத்திய குஜராத்தை சவுராஷ்டிராவுடன் இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள இந்தப் பாலம், அரசால் முறையாக பராமரிக்கப்படாததால் இந்த விபத்து நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular