Homeஉள்நாடுசெம்மணியில் புதிய தடயவியல் ஆய்வுத்தளமாக இரண்டாவது புதைகுழி பிரகடனம்!

செம்மணியில் புதிய தடயவியல் ஆய்வுத்தளமாக இரண்டாவது புதைகுழி பிரகடனம்!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில், அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் ஆய்வுத்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு அருகிலுள்ள ஒரு பகுதியும் புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தப் பகுதியே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் ஆய்வுத்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றையஅகழ்வின் போது 4 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14 ஆம் நாள் அகழ்வு இன்று இடம்பெறுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular