Homeஉள்நாடுநோர்வூட்டில் விரைவில் இதொகா ஆட்சி மலரும்: செந்தில் தொண்டமான் உறுதி

நோர்வூட்டில் விரைவில் இதொகா ஆட்சி மலரும்: செந்தில் தொண்டமான் உறுதி

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன.” – என்று இதொகா தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தி அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட இடங்களில் தேசிய மக்கள் சக்தியும் ஆட்சியமைக்கும் என்ற அடிப்படையில் இந்தப் புரிந்துணர்வு எட்டப்பட்டது.

குறிப்பாக நுவரெலியா மாநகர சபை, வலப்பனை, அங்குராகெத்த, தலவாக்கலை,ஹட்டன் டிக்கோயா நகரசபை, கொத்மலை ஆகிய இடங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதாகவும், நுவரெலியா பிரதேச சபை,கொட்டகலை பிரதேச சபை, அக்கரப்பத்தன பிரதேச சபை, நோர்வுட் பிரதேச சபை ஆகிய இடங்களில் இ.தொ.கா ஆட்சி அமைப்பாகவும் புரிந்துணர்வு எட்டப்பட்டது.

இந்த நிலையில், நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. அதிக ஆசனங்களை பெற்றிருந்தும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏனைய தரப்புடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

நோர்வூட் பிரதேச சபையில் போட்டியிட்ட ஏனைய கட்சிகளை விட அதிகமான வாக்குகளை பெற்று இ.தொ.கா முதலிடத்தை பெற்றதனால், மக்கள் ஆணையை தேசிய மக்கள் சக்தி மதிப்பதாகவும், மக்கள் ஆணையை நிலைநாட்டுவதற்கான தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் இக்கலந்துரையாடலின் போது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் தெரிவித்தனர்.

மேலும், விரைவில் நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. ஆட்சியமைக்கும்.‘‘ என்று இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.” –  எனவும் இதொகா தலைவரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular