Homeஉள்நாடுசெம்மணி புதைகுழியில் இராணுவத்தின் உடல்களாம்!

செம்மணி புதைகுழியில் இராணுவத்தின் உடல்களாம்!

செம்மணி புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள், புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினருடையவையாகக்கூட இருக்கலாம் என்று புது புரளியைக் கிளப்பி விட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்ச.

கொழும்பில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” செம்மணி புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள், யாருடையவை என்பது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. சிலவேளை புலிகள் அமைப்பால் கொல்லப்பட்ட தமிழர்களுடையவையாக  இருக்கலாம். அவ்வாறு அல்லாவிட்டால் புலிகள் அமைப்பினரால் கொல்லப்பட்ட இராணுவத்தினருடையதாக இருக்கலாம்.”- எனவும் விமல் சந்தேகம் வெளியிட்டார்.

அப்படியும் அல்லாவிட்டால் புலிகளால் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் புதைக்கப்பட்ட இடமாக இருக்கலாம்.
மேலும் போரின்போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்கள் புதைக்கப்பட்ட இடமாகக்கூட இருக்கலாம்.

அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் யாருடையது என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.  நிலைமை இவ்வாரு இருக்க, அப்பாவி தமிழ் மக்களே கொன்று புதைக்கப்பட்டுள்ளனர், இது மனித குலத்துக்கு எதிரான செயற்பாடு, இப்படியான அநீதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரிந்துரையைக்கூட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கலாம்.” – என விமல்வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular