Homeஉள்நாடுநானுஓயாவில் தேயிலை ஏற்றிச்சென்ற லொறி விபத்து: இருவர் காயம்!

நானுஓயாவில் தேயிலை ஏற்றிச்சென்ற லொறி விபத்து: இருவர் காயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சமர்செட் பகுதி தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று நேற்றிரவு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா ஒலிபண்ட் தோட்டத்தில் இருந்து நானுஓயா சமர்செட் தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலை கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி தேயிலை கொழுந்துடன் விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வி.தீபன்ராஜ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular