Homeஉள்நாடுமாகாணசபைத் தேர்தலும் விரைவில் வேண்டும்!

மாகாணசபைத் தேர்தலும் விரைவில் வேண்டும்!

” அதிகாரப்பகிர்வுக்கு மாகாணசபை முறைமை மிக அவசியம். எனவே, அதற்குரிய தேர்தலையும் அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மாகாணசபைத் தேர்தலும் விரைவில் நடத்தப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம். இதற்கான நகர்வுகளை அரசாங்கம் கூடிய விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதித்துவம் பல வருடங்களாக இயங்காமல் உள்ளன. இது ஜனநாயகம் சார் பிரச்சினையாகும். எனவே, ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல் அவசியம். அதிகாரப்பகிர்வும் மிக முக்கியம். அதற்காக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular