Homeஉள்நாடுஅணையா தீபம் செம்மணியில் இன்று ஏற்றல்!

அணையா தீபம் செம்மணியில் இன்று ஏற்றல்!

யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று ஆரம்பமாகவுள்ள ‘அணையா விளக்கு’ போராட்டத் தில் கட்சி பேதங்களைக் கடந்து நீதிக்காக அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி தொடர்போராட்டமொன்று செம்மணி யில் இன்று காலை ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்து இந்தப் போராட்டம் மூன்று தினங்கள் இரவு பகலாக நடைபெறவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு அணை யாத தீபம் ஏற்றப்படும். அந்த தீபத்தை, தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமலாக் கப்பட்டவர்களின் உறவுகள், படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தியின் உறவினர், மதத் தலைவர்கள் ஏற்றிவைப்பர். தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெறும்.

இன்று மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான கதை வாசிப்பு அங்கு இடம் பெறும். இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடப்படும்.

இப் போராட்டத்திற்கு பல்வேறு பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் தமது முழு ஆதரவை வழங்கியுள்ள மையுடன் அனைவரையும் அதிக் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular