Homeஉலகம்அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் எச்சரிக்கை!

 

ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அந்நாட்டை கொதிப்படைய வைத்துள்ளது.

அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம் என ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி எச்சரிக்கை விட்டுள்ளார்.

இதுபற்றி ஈரான் தலைவர் காமேனியின் பிரதிநிதி கூறும்போது,

‘ பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குவோம். தாமதமின்றி உடனே தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம்.” – என்று குறிப்பிட்டார்.

எனினும், ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை விட அதிக பலத்துடன் நாங்கள் தாக்குவோம் என டிரம்பும் எச்சரித்து உள்ளார்.

ஈரானிய ஆதரவு பெற்ற போராளி அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள தூதரகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular