Homeஉள்நாடு30 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!

30 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!

எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர ஜகத் விக்கிரமரத்ன  தலைமையில் நேற்று (20) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11வது பிரிவுக்கு அமைய அரசாங்கத்தினால் நிதி செயல்நுணுக்கக் கூற்று ஜூன் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கிலேயே இவ்வாறு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இதற்கு அமைய நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய பிரதமரினால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் நாடாளுமன்றம் ஜூன் 30 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு கூட்டப்படவுள்ளது.

இது தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை பி.ப 4.30 மணிவரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், ஜூலை மாதம் 8, 9 மற்றும் 11ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தை கூட்டுவது பற்றிய தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular