Homeஉலகம்ஈரான் இராணுவத் தளபதியை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

ஈரான் இராணுவத் தளபதியை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய தெஹ்ரானில் தாக்குதலில் கொல்லப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி ஈரானிய ஆயுதப் படைகளின் அவசரகால கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார்.

அவர் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் ஈரானிய ராணுவம் இரண்டிற்கும் கட்டளை தளபதியாக இருந்தார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரானில் இருந்து ஏவப்பட்ட புதிய ஏவுகணைகளைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular