Homeஉள்நாடுஇணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சிக்கு ஆனந்தசங்கரி அழைப்பு

இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சிக்கு ஆனந்தசங்கரி அழைப்பு

தமிழரசுக்கட்சியினர் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும். இவ்வாறு இணைவதன் மூலம் நன்மையான விடயங்களைப் பெறமுடியும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

‘இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வையே நான் வலியுறுத்திவருகின்றேன். சிங்கள, இஸ்லாமிய மக்களும் அதனை வரவேற்றனர். அந்தத் தீர்வுத் திட்டத்துக்காக நாம் தொடர்ந்தும் முயற்சித்து வெற்றி பெறமுடியும். அதற்கான காலம் மீண்டும் உருவாகியுள்ளது.

அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். இன்று பதவிக்காக அலைகின்றனர். பதவிகளுக்காக கூட்டுச்சேருகின்றனர். நான் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. இன்றைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு அனைவரும் தமிழர் விடுதலை கூட்டணியில் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும்.” – எனவும் ஆனந்த சங்கரி குறிப்பிட்டார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular