Homeஉள்நாடுநுவரெலியா மாவட்டத்தில் 4 சபைகளில் ஆட்சியமைக்கிறது இதொகா!

நுவரெலியா மாவட்டத்தில் 4 சபைகளில் ஆட்சியமைக்கிறது இதொகா!

நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, நோர்வூட், அக்கரப்பத்தனை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச சபைகளில் இதொகா ஆட்சியமைக்கவுள்ளது.

மேற்படி சபைகளில் இதொகா உறுப்பினருக்கே தவிசாளர் பதவி வழங்கப்படவுள்ளது. உப தவிசாளர் பதவி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகரசபை, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை உள்ளிட்ட பிரதேச சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கின்றது.

மேற்படி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவி என்பிபி உறுப்பினர்களுக்கே கிடைக்கப்பெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular