தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து வீரர்கள் ஓய்வு பெறுவதாயின், 3 மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு கழகங்களுக்கான தொடர்களில் விளையாடுவதற்காக, “ஆட்சேபனை இல்லா சான்று’’ (NOCs) பெற விரும்பும் ஓய்வுபெற்ற தேசிய வீரர்களுக்கு, ஆறு மாத ஓய்வு திகதியை நிறைவு செய்திருந்தால் மாத்திரமே வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.