Homeஉலகம்போர் நிறுத்த யோசனையை நிராகரித்தது ஈரான்!

போர் நிறுத்த யோசனையை நிராகரித்தது ஈரான்!

 

இஸ்ரேல் மீது ஈரான் இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் குறித்த எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன.

இஸ்ரேலின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில் 67 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு இஸ்ரேல் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று ஈரான் , மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் ஓமனிடம் தெரிவித்துள்ளது.

“இஸ்ரேலின் முன்கூட்டிய தாக்குதல்களுக்கு ஈரான் தனது பதிலடியை முடித்த பின்னரே தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம.” என்று கத்தார் மற்றும் ஓமன் மத்தியஸ்தர்களிடம் ஈரான் தரப்பினர் தெரிவித்தனர்.

இஸ்ரேல் மீது ஈரான் ஒரே இரவில் கொடிய தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானின் ஏவுகணை தளங்களை குறிவைத்து இஸ்ரேல் புதிய தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular