Homeவிளையாட்டுவரலாறு படைத்தது தென்னாபிரிக்கா!

வரலாறு படைத்தது தென்னாபிரிக்கா!

 

தென் ஆபிரிக்கா அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது.

இதன் 2023-25 சீசனுக்கான இறுதிப்போட்டி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடின.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, தென் ஆப்ரிக்கா 138 ரன் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.

பின், 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம் (102), கேப்டன் பவுமா (65) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் கைவசம் வைத்திருந்த தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 69 ரன் தேவைப்பட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு 147 ரன் சேர்த்த போது கம்மின்ஸ் ‘வேகத்தில்’ பவுமா (66) வெளியேறினார். ஸ்டார்க் பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (8) போல்டானார். பொறுப்பாக ஆடிய மார்க்ரம், வெற்றிக்கு கைகொடுத்தார். ஹேசல்வுட் ‘வேகத்தில்’ மார்க்ரம் (136) அவுட்டானார்.

தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பெடிங்ஹாம் (21), வெர்ரேன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் ஐ.சி.சி., தொடர்களின் ‘நாக்-அவுட்’ போட்டியில் கண்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தென் ஆப்ரிக்கா, டெஸ்ட் அரங்கில் புதிய உலக சாம்பியன் ஆனது.

தென் ஆப்ரிக்க அணி 27 ஆண்டுகளுக்கு பின், ஐ.சி.சி., நடத்தும் மிகப் பெரிய தொடரில் கோப்பை வென்றது. கடைசியாக, 1998ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றிருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular