இலங்கையின் கையிருப்பிலிருந்த தங்கத்தின் அளவு குறைவடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது.
நவம்பர் மாத இறுதியில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 1,588.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
கடந்த நவம்பர் மாதம் கையிருப்பிலிருந்த 382.2 மில்லியன் டொலர் பெறுமதியான தங்க கையிருப்பு, டிசம்பர் மாத இறுதியில் 175.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 206.8 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம், மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், தங்கத்தின் கையிருப்பு 54 சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய தகவல்களின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.