Homeஉள்நாடுயாழில் சில சபைகளில் என்.பி.பி. ஆட்சியமைக்கும்!

யாழில் சில சபைகளில் என்.பி.பி. ஆட்சியமைக்கும்!

“யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்.”

– இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்.காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது பல்வேறு உள்ளூராட்சி சபைகளில் தீர்மானம் மிக்க சக்தியாக தேசிய மக்கள் சக்தி உள்ளது. ஆட்சியமைப்பது தொடர்பில் பல்வேறு தரப்புகள் எங்களோடு உரையாடுகின்றார்கள்.

இதுவரைகாலமும் எங்களுக்கு எதிராக ஓரணியில் திரண்டு தூற்றியவர்கள் இன்று எங்களைக் காதலுடன் பார்க்கின்றார்கள்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உருவாக்கப்படவுள்ள எந்தவொரு உள்ளூராட்சி சபை நிர்வாகங்களுக்கும் இடையூறாக நாங்கள் இருக்கமாட்டோம். கடந்த காலங்களில் எங்களைத் தூற்றி இனவாத ரீதியாக தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொண்ட எந்தவொரு அணியுடனும் சேரப்போவதில்லை.

யாழ். மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்.

யாழ். மாநகர சபையில் நாங்கள் போட்டியிடுவோமாக இருந்தால் மேயர் வேட்பாளராகக் கபிலனையே நிறுத்துவோம்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular