Homeஉள்நாடுதாய், மகள் உட்பட நால்வர் நீரில் மூழ்கி பலி!

தாய், மகள் உட்பட நால்வர் நீரில் மூழ்கி பலி!

பொலன்னறுவை மாவட்டத்துக்குட்பட்ட திம்புலாகல எல்லவெவ வாவியில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.

தாய், மகள் மற்றும் இளம் தம்பதியினர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை தமது உறவினர்களின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது எல்லவெவ வாவியில் நீராடிக்கொண்டிருக்கையில் ஆணொருவர் நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்டவேளையே ஏனையோரும் மூழ்கியுள்ளனர்.

30 வயது தாய், 13 வயது மகள், மற்றும் 27 வயது கணவரும், 25 வயது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular