Homeஉள்நாடுசெம்மணி புதைகுழி குறித்து துரித விசாரணை: நீதி அமைச்சர் உறுதி!

செம்மணி புதைகுழி குறித்து துரித விசாரணை: நீதி அமைச்சர் உறுதி!

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணை நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. சுட்டிக்காட்டிய விடயத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

” நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலம் முன்வைத்துள்ள விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், துரிதமாக விசாரணைகளும் இடம்பெறும்.

இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் நீங்கள் சுட்டிக்காட்டிய விடயத்தின் முக்கியத்துவத்தை உணர்கின்றேன். இதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விளக்கமளிப்பேன்.” – என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular