Homeஉள்நாடு16 ஆம் திகதி கொழும்பில் என்.பி.பி. ஆட்சி உறுதியாகும்!

16 ஆம் திகதி கொழும்பில் என்.பி.பி. ஆட்சி உறுதியாகும்!

கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தியே நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று அரசாங்கம் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,

” கொழும்பை வெல்வோம் எனக்கூறி மேயர் வேட்பாளர் ஒருவரை ஐக்கிய மக்கள் சக்தி களமிறக்கியது. அந்த மேயர் வேட்பாளர் சொந்த தொகுதியில் தோற்றுவிட்டார். தற்போது மேயர் வேட்பாளர் யாரென்பதை அறிவிக்காமல் ஆட்சியைப் பிடிப்பார்களாம்.

கொழும்பு மாநகரில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இதற்கமைய கொழும்பில் நாம் ஆட்சியமைப்போம். கொழும்பை கட்டியெழுப்புவோம். கொழும்பு மாநகரிலும் நாம் ஆட்சியமைப்போம். அதுவரையில் எதிரணிகளின் நகைச்சுவைகளை பார்த்துக்கொண்டிருப்போம்.” – என்றார்.

கொழும்பு மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தேர்வு எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular